அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவில் விரிவடைந்து வரும் தரவு மைய துறையிலிருந்து ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் நம்பிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAY 2026 3:53PM by PIB Chennai

தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம், அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற துறைகள் எதிர்கால உலக அளவிலான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர தலைமைத்துவ உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், இந்தியாவில் அடுத்த  10 ஆண்டுகளில் முதலீடுகள் வேலைவாய்ப்பு, எரிசக்தி அமைப்புகள், புவிசார் அரசியல் போட்டித் திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உத்திசார் நடவடிக்கையாக பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் தரவு மையத்தின் திறன் 1.5 ஜிகாவாட்டிலிருந்து 6.5 ஜிகாவாட்டாக வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தரவு மைய விரிவாக்கப் பணிகள், நுண்ணறிவுத் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஒருங்கிணைப்பு, மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில்  பொறியியல் துறை சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

6ஜி அலைக்கற்றை, செமிகண்டக்டர் உற்பத்தி. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு பெருமளவிலான வாய்ப்புகள் உருவாகி வருவதாக திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

எதிர்காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், உத்திசார் தொழில்களுக்குத் தேவையான பணித்திறனை மேம்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டு வருவதாக திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264115&reg=3&lang=1  

***

TV/SV/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2264307) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada