தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தியாவில் பொது வைஃபை நெட்வொர்க் பெருக்கம் குறித்த கருத்துகளைத் தெரிவிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 3:15PM by PIB Chennai
இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் (ட்ராய்) இந்தியாவில் பொது வைஃபை நெட்வொர்க் பெருக்கம் குறித்த கலந்தாய்வு ஆவணத்தை 2026 ஏப்ரல் 27-ம் தேதி வெளியிட்டது. இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கடைசி தேதி முறையே 2026 மே 25 மற்றும் ஜூன் 8 என ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி தொழிற்சங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது. இதன்படி, கலந்துரையாடல் ஆவணம் மீதான கருத்துகளை சமர்பிப்பதற்கான கடைசி தேதி முறையே 2026 ஜூன் 1 மற்றும் ஜூன் 15 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை advbbpa@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள், மற்றும் விளக்கங்களைப் பெறுவதற்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசகர் (அகண்ட அலைவரிசை / கொள்கை பகுப்பாய்வு) டாக்டர் அப்துல் கயூமின் 91-11 20907757 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2264088)
SS/SV/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2264299)
வருகையாளர் எண்ணிக்கை : 10