இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் இளம் தொழில்முனைவோர் பணிக்குழுக் கூட்டம்: இந்தூரில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 20 MAY 2026 6:57PM by PIB Chennai

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ், பிரிக்ஸ் இளம் தொழில்முனைவோர் பணிக்குழுக் கூட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இணையவழியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள் தொகையில் பாதியைத் கொண்டுள்ளதாகவும், இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மட்டும் 65 சதவீத இளைஞர்கள் உள்ளதால், உலகளாவிய வேலைவாய்ப்புகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் பிரிக்ஸ் நாடுகளுக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் திறன் மேம்பாடு,  டிஜிட்டல் வளர்ச்சி மூலம் இந்தியாவின் தொழில்முனைவோர் சூழல் உலகளவில் சிறந்து விளங்குவதாகவும் அவர் கூறினார்.

மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே பேசுகையில், சிறிய நகரங்களைச் சேர்ந்த இந்திய இளைஞர்கள் வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கி வருவதைச் சுட்டிக்காட்டினார். இக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, நிதித் தொழில்நுட்பம், பசுமைத் தொழில்முனைவோர் மற்றும் காலநிலை சார்ந்த வணிக மாதிரிகள் குறித்துப் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தங்களின் சிறந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263380&reg=3&lang=1  

***

SS/VK/PD


(रिलीज़ आईडी: 2264012) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Malayalam