மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பல்வேறு நிலைகளில் மேலாண்மை செய்யப்படும் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு வழிகாட்டு நெறிமுறைகள் 2026
प्रविष्टि तिथि:
21 MAY 2026 3:44PM by PIB Chennai
பள்ளிக்கல்வியில் சமூக பங்கேற்பை வலுப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சகம், 2026 மே 6 அன்று பள்ளி மேலாண்மைக் குழு வழிகாட்டு நெறிமுறைகள் 2026-ஐ வெளியிட்டது. பள்ளி நிர்வாகத்தை ஊக்குவிக்கவும் குழந்தைகளின் நலன்களை மையமாகக் கொண்டு மேலும் ஆதரவான, பயனுள்ள கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம் பள்ளிகளில் ஒட்டுமொத்த நடவடிக்கையை மேம்படுத்தவும் இது வகுக்கப்பட்டது. அனைத்துத் தரப்பினரையும் ஒரே தரத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் பள்ளிகளின் மீது சமூகத்திற்கு உரிமை உணர்வை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 21-ன் கீழ் பல்வேறு நிலைகளில் மேலாண்மை செய்யப்படும் பள்ளிகளுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்துமா என்பது குறித்து சமூகத்தின் சில பிரிவுகளிடமிருந்து கல்வி அமைச்சகத்திற்கு கோரிக்கை எழுந்தது. இது குறித்து பரிசீலனை செய்ததையடுத்து கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 2(என்)(iv)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகள் தங்கள் செலவினங்களுக்காக அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பிடமிருந்து எந்தவித உதவியையோ மானியத்தையோ பெறாமல் இருந்தால், அந்தப் பள்ளிகளுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263719®=3&lang=1
***
SS/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2263893)
आगंतुक पटल : 46