சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்கள் பராமரிப்பாளர்களுக்குப் பயன்படும் 'ஜீவன்' செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2026 12:23PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில், மே 22, 2026 அன்று காலை 10:00 மணிக்கு, "சிறப்பாகச் செயல்படும் பராமரிப்பு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குதல்" குறித்த இணையவழி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மூத்த குடிமக்களுக்கான 'ஜீவன்' செயலி மற்றும் 'பராமரிப்பாளர் தகவல் பலகை' ஆகியவற்றைத் தொடங்கி வைக்கிறார். மூத்த குடிமக்களுக்கான பராமரிப்புச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில், இந்த அமைச்சகம் முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் விவரிக்கும் வகையில், டாக்டர் வீரேந்திர குமார் சிறப்புரையாற்றுகிறார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்கள் திரு பி எல் வர்மா மற்றும் திரு ராம் தாஸ் அதாவலே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
மேலும், பராமரிப்பு சார்ந்தப் பொருளாதாரத் துறையில், கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்கள் பின்பற்றி வரும் சிறந்த நடைமுறைகள் குறித்த விளக்கக் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். இந்நிகழ்ச்சியில், முக்கியக் கொள்கை சார்ந்த சிக்கல்கள், திட்டச் செயலாக்கத்தில் உள்ள இடைவெளிகள், புதிதாகத் தோன்றும் முன்னெடுப்புகள், சிறந்த நடைமுறைகள், குறிப்பிட்ட காலவரையறையுடன் கூடிய சாத்தியமிக்க செயல்பாட்டுப் பரிந்துரைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
நாட்டில், மூத்த குடிமக்களின் எண்னிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், தொழில்நுட்பம், சமூகப் பங்கேற்பைப் பயன்படுத்தி, பராமரிப்புச் சேவைகளுக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263601®=3&lang=1
***
SS/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2263774)
வருகையாளர் எண்ணிக்கை : 13