சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
79-வது உலக சுகாதார மாநாடு: சுகாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலான நிகழ்வில் மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
21 MAY 2026 9:16AM by PIB Chennai
ஜெனீவாவில் 79-வது உலக சுகாதார அமர்வில் சுகாதாரத்தில் “செயற்கை நுண்ணறிவு: சட்டங்கள், நெறிமுறை மேற்பார்வை, ஆராய்ச்சி, சமத்துவம்” என்ற தலைப்பிலான நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ பி நட்டா உரையாற்றினார். உலகில் சுகாதார அமைப்புகள், நிர்வாகக் கட்டமைப்புகள், பொருளாதாரங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையை மறுவடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தக்க சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தார். சுகாதாரச் சேவையை மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு சிறந்த வாய்ப்புகளை அளித்தாலும், அதன் பயன்கள் அனைவரையும் சென்றடையும் வகையில், அது உரிய ஒழுங்குமுறை, தீவிர ஆராய்ச்சி, நெறிமுறை மேற்பார்வை, சமத்துவத்திற்கான ஆழ்ந்த உறுதிப்பாடு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2015-ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை தொடங்கியதன் வாயிலாக இந்தியா வலுவான டிஜிட்டல் தளத்தை அமைத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சியானது, இந்தியாவை டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்டதாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றி செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு இந்தியாவை தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263531®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2263651)
आगंतुक पटल : 37