உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
லண்டன் ஹீத்ரோ-பெங்களூரு ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம் தரையிறக்கம்: மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 9:37PM by PIB Chennai
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787-8 விமானம், லண்டன் ஹீத்ரோவில் இருந்து பெங்களூருக்கான தனது பயணத்தை முடித்த பிறகு தரையிறக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.
இந்த விமானத்தின் இடதுபுற எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை லேசாக அழுத்தும்போது, அது இயங்கும் நிலையில் இருந்து திடீரென நிறுத்தப்படும் நிலைக்கு நழுவுவதாகவும், அது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சரியான பிடிப்புடன் இல்லை என்றும் விமானி தனது குறைபாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகளின் முன்னிலையில் அந்த எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளைப் பரிசோதித்துச் செயல்பாட்டுச் சோதனைகளை மேற்கொண்டது.
இந்தப் பரிசோதனை முடிவுகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த தயாரிப்பு நிறுவனம், அந்த எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வடிவமைக்கப்பட்டபடி இயந்திர ரீதியாகச் சரியாகச் செயல்படுவதாகவும், அது பயன்பாட்டுக்கு உகந்தது என்றும் முடிவு செய்து தெரிவித்தது. இருப்பினும், சம்பந்தப்பட்ட எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் தொடர்ச்சியான வான்வழித் தகுதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, தயாரிப்பு நிறுவனத்தின் மையத்திலேயே விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகளின் முன்னிலையில் அதனை மீண்டும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்துமாறு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
***
(Release ID 2263036)
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263250)
வருகையாளர் எண்ணிக்கை : 8