பிரதமர் அலுவலகம்
தில்லி, பாலம் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2026 2:45PM by PIB Chennai
பாலம் பகுதியில் நிகழ்ந்த துயரமான தீ விபத்து குறித்துப் பிரதமர் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.
தில்லி, பாலம் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து மிகுந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ள பிரதமர், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியாக வழங்கப்படும் என்று திரு மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"தில்லி, பாலம் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்து வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும்.”
***
(Release ID: 2241676)
TV/IR/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2263182)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam