அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவும், நார்வேயும் உத்திசார்ந்த அறிவியல் மற்றும் புதுமைகண்டுபிடிப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 12:20PM by PIB Chennai

நார்வே நாட்டிற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டதன் காரணமாக இந்தியா – நார்வே இடையே இருதரப்பு உறவுகள் வலுவடைந்த நிலையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் (சிஎஸ்ஐஆர்) அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித்துறை (பிஎஸ்ஐஆர்)  ஆகியவை நார்வேயின் முன்னணி ஆராய்ச்சி, கல்வி மற்றும் தொழில்துறை  நிறுவனங்களுடன் 2026 மே 18 அன்று ஆஸ்லோவில் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இரு நாடுகளுக்கு இடையே அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக்கண்டுபிடிப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் சிஎஸ்ஐஆர், டிஎஸ்ஐஆர் பிரதிநிதிகள் நார்வே நிறுவனங்களின் உயர் பிரதிநிதிகள் ஆகியோர் கையெழுத்திட்டனர். நிறுவனங்களின் கூட்டாண்மை, புத்தொழில் மற்றும் தொழில்துறை ஈடுபாடு, கல்வி ஒத்துழைப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் அதே வேளையில், ஆராய்ச்சி, புதுமைகண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்தியா – நார்வே இடையேயான தொடர்புகளை விரிவுபடுத்துவது இந்த ஒத்துழைப்பின் நோக்கமாகும்.

பருவநிலை, தூய்மை எரிசக்தி, பெருங்கடல்கள், சுகாதாரம் உட்பட உலகளாவிய சவால்கள் மற்றும் நீடித்த மேம்பட்ட இலக்குகள் தொடர்புடையவற்றில் காலமுறை அடிப்படையிலான ஆய்வு, விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் வருகை பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒருங்கிணைப்பு, கூட்டுப் பயிலரங்குகள் ஆகியவை குறித்து இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இரு நிறுவனங்களுக்கு இடையேயான தற்போதைய 2014 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ், நார்வேயின் முதன்மையான தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பான சின்டெஃப்புடன் ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில் (2026-29) சிஎஸ்ஐஆர் கையெழுத்திட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262669&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2262801) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Malayalam