பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் பெட்ரோலியப் பொருட்களின் இருப்பை மாநில அரசும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 5:53PM by PIB Chennai

மத்திய கிழக்கில் நிலவிவரும் புவிசார் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் போதுமான எல்பிஜி, பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக மகாராஷ்டிர அரசும், பிபிசிஎல், ஐஓசிஎல், ஹெச்பிசிஎல் போன்ற எண்ணெய் சந்தைப்படுத்தும்  நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் திரு மிஹிர் கணேஷ் ஜோஷி மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களிலும், சேமிப்புக் கிடங்குகளிலும், பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. மே 2026-இன் முதல் பதினைந்து நாட்களில், டீசல் தேவையில் 19.66% வளர்ச்சியும், பெட்ரோல் தேவையில் 20.39% வளர்ச்சியும் காணப்பட்டது. மே 2026-இன் முதல் பதினைந்து நாட்களில் மகாராஷ்டிராவில் மொத்தம் 267 ஆயிரம் கிலோலிட்டர் பெட்ரோலும், 502 ஆயிரம் கிலோலிட்டர் டீசலும் விநியோகிக்கப்பட்டது.

 

மகாராஷ்டிராவின்  மூன்று பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிலும் தற்போது சுமார் 32,995 மெட்ரிக் டன் எல்பிஜி கையிருப்பு உள்ளது. அதேவேளையில், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக விநியோகஸ்தர்களின் கையிருப்பு தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் இருப்பும் போதுமானதாக உள்ளது மற்றும் வாடிக்கையாளர் முன்பதிவுகளின் அடிப்படையில் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

போருக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், வணிக ரீதியான எல்பிஜி விநியோகத்தில் கிட்டத்தட்ட 60% பூர்த்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற முன்னுரிமைத் துறைகளுக்கு 100% விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. இதுதவிர, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி (FTL) மறு நிரப்பல்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் சராசரியாக தினமும் சுமார் 23,000 சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262414&reg=3&lang=1

(Release ID: 2262414)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262557) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi