பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 5:52PM by PIB Chennai
மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட்டது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கைகள், பல்வேறு துறைகளில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்கள். நாட்டின் உரங்களின் இருப்பு குறித்த புதிய தகவல்களையும் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சக அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
நாட்டில் உரங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2026-ம் ஆண்டின் காரிஃப் பருவத்திற்குத் தேவையான உரங்களின் அளவு, 390.54 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 200.98 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உரங்கள் கையிருப்பில் உள்ளது. முக்கிய உரங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை,
ஆன்லைன் வழியிலான எல்பிஜி சிலிண்டர் பதிவு 99 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் சுமார் 1.90 லட்சம் 5 கிலோ இலவச வர்த்தக சிலிண்டர் விற்பனையாகி உள்ளது. சுமார் 7.37 லட்சம் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
2026 மார்ச் மாதத்திலிருந்து 7.76 லட்சம் புதிய நுகர்வோர் பதிவு செய்துள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கடந்த 96 மணி நேரங்களில் 61 பேர் உட்பட இதுவரை 3,217 இந்திய கப்பல் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262415®=3&lang=1
****
TV/IR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2262481)
வருகையாளர் எண்ணிக்கை : 14