உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தொழில்துறை வளாகங்களைத் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2026 4:43PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'மில்லியன் மைண்ட்ஸ் டெக் பார்க்', 'கிரேமி சிட்டி வளாகம்' ஆகியவற்றை இன்று (17.05.2026) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, இந்தியாவின் எதிர்காலம் குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல் என்று கூறினார். தொழில்நுட்பம், புத்தாக்கம், அறிவு, தொழில்முனைவு, உயர் திறன் சார்ந்த தொழில்கள் ஆகியவை குஜராத்திற்கும் வர வேண்டும் என்பதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று அவர் கூறினார். குஜராத் எந்தவொரு துறையிலும் உறுதியுடன் நுழையும்போது, அது விரைவாக முதல் இடத்தை அடைகிறது என்றும், இந்தத் துறையிலும் அதே வெற்றியை மாநிலம் அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு குஜராத் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சரான பிறகு, தொழில்துறை வளர்ச்சி வேகம் அடைந்தது என்றும் அவர் கூறினார்.

உற்பத்தி, பொறியியல், மருந்துத் தொழில், துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து, பசுமை ஆற்றல், தொழில்துறை உள்கட்டமைப்பு, முதலீடுகள் போன்ற துறைகளில் குஜராத் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். சேவைத் துறையிலும் குஜராத்தை முதல் மூன்று மாநிலங்களுக்குள் கொண்டு வருவதே அடுத்த நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக, பெங்களூரு, ஹைதராபாத், புனே, குருகிராம் ஆகிய நகரங்களுக்கு இணையாக அகமதாபாத்தை நிலைநிறுத்த, புதிதாகத் திறக்கப்படும் இதுபோன்ற தொழில்நுட்பப் பூங்காக்கள் வகை செய்யும் என்றும் அவர் கூறினார்.

 சுமார் 1,100 கோடி செலவில் 13.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள 'மில்லியன் மைண்ட்ஸ் டெக் பார்க்', அதன் முதல் கட்டத்தில் 9,000 உயர் திறன் கொண்ட நிபுணர்களுக்கு அதிநவீன பணிச்சூழலை வழங்கும் என்று அவர் கூறினார். சுமார் 15,000 கோடி முதலீட்டில், ஏழு கட்டங்களாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 63,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என திரு அமித் ஷா தெரிவித்தார்.

கணேஷ் ரியல் எஸ்டேட் மேலாண்மை நிறுவனத்தின் ஜெர்மி (GREMI) வளாகத்தையும் திரு அமித் ஷா திறந்து வைத்தார். ரியல் எஸ்டேட் துறையில்  இந்த நிறுவனம் நாட்டிற்கு ஒரு முக்கியமான பணியை மேற்கொள்கிறது என்று அவர் கூறினார்சுற்றுச்சூழல், திட்டமிடல், நகர்ப்புறத் திட்டமிடல் ஆகியவை ரியல் எஸ்டேட் வளர்ச்சியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்றும், முறையான திட்டமிடல் இல்லாமல் நல்ல நகரங்களை உருவாக்க முடியாது என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் நகர்ப்புறத் திட்டமிடல் சீர்திருத்தங்கள், நகரத் திட்டமிடலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு நவீன சிந்தனையையும் திறமையான தலைமைத்துவத்தையும் வழங்கும் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262002&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2262027) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Kannada