ஜல்சக்தி அமைச்சகம்
குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை, குடிநீர் குறித்த மாவட்ட ஆட்சியர்களின் 8-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 5:25PM by PIB Chennai
ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, ஜல் ஜீவன் இயக்கம் (ஜேஜேஎம்) 2.0-ன் செயலாக்கத்தை விரைவுபடுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது குறித்து விவாதிப்பதற்காக, மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள்/துணை ஆணையர்கள் மற்றும் மாநில/யூனியன் பிரதேச ஜல் ஜீவன் இயக்க திட்ட இயக்குநர்களை ஒன்றிணைக்கும் குடிநீர் குறித்த மாவட்ட ஆட்சியர்களின் 8-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியை இன்று காணொலிக் காட்சி மூலம் நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு, தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் (NJJM) கூடுதல் செயலாளரும், திட்ட இயக்குநருமான திரு கமல் கிஷோர் சோன் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், துறையின் செயலாளர் திரு அசோக் கே.கே. மீனா தலைமை தாங்கினார்.
நிலைத்தன்மையை வலியுறுத்திப் பேசிய திரு அசோக் கே.கே. மீனா, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் நீண்டகாலச் செயல்பாடு வலுவான உள்ளூர் நிர்வாகத்தைச் சார்ந்துள்ளது என்றார். ஜல்ஜீவன் இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ், கிராம உள்கட்டமைப்பு கிராமப் பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதே சமயம் பெருமளவிலான உள்கட்டமைப்பு தொடர்ந்து மாநிலங்களிடமே இருக்கும். கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளூர் சேவை வழங்குநர்களாகச் செயல்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக கிராம சபைகள் மூலம் சமூகப் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261459®=3&lang=1
(Release ID: 2261459)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261662)
வருகையாளர் எண்ணிக்கை : 6