மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ராஜஸ்தானின் முதல் செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 6:13PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம், பிவாடி மாவட்டத்தில் எல்சினா (ELCINA) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்பு (EMC) மற்றும் சஹஸ்ரா செமிகண்டக்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செமிகண்டக்டர் ATMP/OSAT ஆலை ஆகியவற்றை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அஸ்வினி வைஷ்ணவ், புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் உலகளவில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறையான செமிகண்டக்டர் துறையில் ராஜஸ்தான் மாநிலம் நுழைவதால், இது மாநிலத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். கடந்த 12 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தியில் இந்தியா அடைந்துள்ள விரைவான முன்னேற்றத்தை அவர் சுட்டிக்காட்டினார். உற்பத்தி 6 மடங்கு அதிகரித்து கிட்டத்தட்ட ₹ 13 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி சுமார் ₹ 4.24 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். செல்பேசிகள் தற்போது இந்தியாவின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாக மாறியுள்ளன என்றும் அவர் எடுத்துரைத்தார்.
மின்னணு உற்பத்தி மற்றும் செமிகண்டக்டர்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்கும் பயணத்தில், இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. 'இந்தியாவில் உற்பத்தி செய்தல்', 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'தற்சார்பு இந்தியா' போன்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட முன்முயற்சிகளால் இந்த முன்னேற்றம் இயக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261509®=3&lang=1
(Release ID: 2261509)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261656)
வருகையாளர் எண்ணிக்கை : 6