இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியாவின் தயார் நிலையைக் குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 2:57PM by PIB Chennai
கிளாஸ்கோவில் இந்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியாவின் தயார் நிலையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, அவர்களுக்கான பிற ஆதரவுகள் ஆகியவை குறித்து இந்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வீரர்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார். முறையான திட்டமிடலும், விளையாட்டு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் அவசியம் என்று அவர் கூறினார். இது இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தரும் என்று அவர் குறிப்பிட்டார்.
கிளாஸ்கோவில் நடைபெறும் நிறைவு விழா குறித்தும், அந்த விழாவின் போது, 2030-ம் ஆண்டு போட்டிகளை நடத்தும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தின் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்வி அம்மாநில விளையாட்டுத்துறை அதிகாரிகள், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261363®=3&lang=1
***
SS/PLM/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261551)
வருகையாளர் எண்ணிக்கை : 6