ரெயில்வே அமைச்சகம்
சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, கடந்த நான்கு மாதங்களில் ரயில்வே, சிமெண்ட் போக்குவரத்தில் 170 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 6:55PM by PIB Chennai
ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் பெரும் வெற்றியாக, இந்திய ரயில்வே கடந்த நான்கு மாதங்களில், சிமெண்ட் போக்குவரத்தில், 170 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், சிமெண்ட் போக்குவரத்தில், ரயில்வே தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள், தடையற்ற, முழுமையான சரக்குப் போக்குவரத்திற்காக, புதுமையான மொத்த சிமெண்ட் டேங்க் கொள்கலன்களை அடிப்படையாகக் கொண்டவை. கொள்கலன் துறை சீர்திருத்தங்களையும் அவற்றின் செயலாக்கத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று ஆய்வு செய்தார்.
ரயில் அடிப்படையிலான மொத்த சிமெண்ட் போக்குவரத்திற்கான திறனை அதிகரிக்கவும், சாலைப் போக்குவரத்திலிருந்து தூய்மையான, திறன் வாய்ந்த சரக்கு ரயில்ப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிமெண்ட்டின் பல்முனை கையாளுதல் திறனை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே, தனிப்பயனாக்கப்பட்ட டேங்க் கொள்கலன்களையும் மொத்த சிமெண்ட் முனையக் கொள்கையையும் அறிமுகப்படுத்தியது.
புதிய அமைப்பு, கையாளும் திறனை எளிதாக்கியுள்ளதுடன், மூலப்பொருள் இழப்பையும் குறைக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறினார். ஓர் இடத்தில் தயாரிக்கப்படும் சிமெண்ட், தற்போது பிரத்யேக டேங்க் கொள்கலன்களில் நேரடியாக நுகர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதால், பல்முனைக் கையாளும் செயல்முறைகள் குறைந்து, ஆலையிலிருந்து, சந்தை வரையிலான செயல்திறன் மேம்படுகிறது. கொள்கலன்கள் நிலையான வடிவத்தில் இருப்பதாலும், ரெடி-மிக்ஸ் கான்கிரீட் எந்திரங்களுடன் இணக்கமாக இருப்பதாலும், சிமெண்ட் கட்டுமான தளங்களில் உடனடியாகப் பயன்படுத்தத் தயாரான நிலையில் சென்றடைகிறது. இது கையாளும் இரண்டு நிலைகளைக் குறைத்து, குறைந்த செலவு மற்றும் விரைவான செயல்பாட்டுடன் கூடிய சரக்குப் போக்குவரத்திற்கு வழிவகுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261139®=3&lang=2
**
TV/SV/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2261370)
வருகையாளர் எண்ணிக்கை : 9