வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
மிசோரம் இஞ்சி இயக்கத்தை ரூ.189.79 கோடி மதிப்பீட்டில் மத்திய அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 8:23PM by PIB Chennai
மத்திய வடகிழக்கு மண்டல வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மிசோரம் முதலமைச்சர் திரு பியு. லால்துஹோமாவுடன் இணைந்து, ரூ.189.79 கோடி மதிப்பிலான 'மிசோரம் இஞ்சி இயக்கத்தை' தொடங்கி வைத்தார். இஞ்சியின் மதிப்புக்கூட்டு சங்கிலியை மேம்படுத்துவதற்காக, மத்திய வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மிசோரம் இஞ்சியில் உலக சராசரியை விட இருமடங்கு அதிகமாக (6-8%) 'ஒலியோரெசின்' சத்து உள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், தற்போது கிலோ ரூ.8-15 ஆக உள்ள விவசாயிகளின் வருமானத்தை பலமடங்கு உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார். இடைத்தரகர்களைத் தவிர்த்து, பதப்படுத்துதல், தரமான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி மூலம் விவசாயிகளை உலகளாவிய சந்தையுடன் இணைக்க இத்திட்டம் வழிவகை செய்யும்.
சுமார் 20,000 விவசாயக் குடும்பங்களை ஒருங்கிணைக்கும் இத்திட்டத்தின் கீழ், ஒரு ஒருங்கிணைந்த பதப்படுத்தும் மையம் மற்றும் மூன்று துணை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிசோரம் இஞ்சியை ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை ஆறு மடங்கு அதிகரிக்கவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் தனித்துவமான தயாரிப்புகளை மேம்படுத்தும் "பிராண்ட் நார்த் ஈஸ்ட்" (Brand North East) முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260850®=3&lang=2
***
EA/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2261103)
வருகையாளர் எண்ணிக்கை : 3