பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவின் சாங்லியில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 11:30PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் சாங்லியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மகாராஷ்டிராவின் சாங்லியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். இந்தத் தருணத்தில், துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.”
மேலும் விவரவங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260481®=3&lang=1
-----
(Release ID: 2260481)
SS/PLM/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260846)
வருகையாளர் எண்ணிக்கை : 10