பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய அரபு  அமீரக அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAR 2026 10:38PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நயானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது அவருக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார். மேற்காசியாவில் தற்போதைய சூழல் குறித்தும், அந்நாட்டு அதிபருடன் பிரதமர் விவாதித்தார். அப்பாவி மக்களின் உயிரிழப்பு மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மீது நடத்தப்படும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறினார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக  பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை  உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இப்பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் கூறினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது அவருக்கு ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

மேற்காசியாவில் தற்போதைய சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம், அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்கும் உள்கட்டமைப்பு சொத்துக்கள் மீது சேதம் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும்  அனைத்து தாக்குதல்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதை வலியுறுத்தினேன்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான, தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை நாங்கள் இருவரும் ஏற்றுக் கொண்டோம். இப்பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்தரதன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.”

----

(Release ID: 2241525)

SS/SV/KPG/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2260639) வருகையாளர் எண்ணிக்கை : 16