PIB Backgrounder
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2026 11:42AM by PIB Chennai

2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ தொலைநோக்கு பார்வையை நோக்கிய பயணத்தில், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் (கிராமின்) உத்தரவாதச் சட்டம், 2025" கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 2005-ஆம் ஆண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் திரும்பப் பெறப்படுகிறது.

இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் வழங்கப்பட்டு வந்த 100 நாட்கள் வேலை உத்தரவாதம் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் ஊதிய வேலைவாய்ப்பாக மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களில் நீர் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார ஆதாரங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான நிரந்தரச் சொத்துகளை உருவாக்குவதில் இச்சட்டம் முக்கிய கவனம் செலுத்துகிறது. நிர்வாக ரீதியாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பயோமெட்ரிக் அங்கீகாரம், ஜியோ-டேக்கிங் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஊதியம் நேரடியாகப் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் மாற்றப்படும். அதே நேரத்தில், பயிர் நடுதல் மற்றும் அறுவடை காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மாநில அரசுகள் ஆண்டுக்கு 60 நாட்கள் வரை இந்த வேலைகளுக்கு இடைவெளி விட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இத்திட்டத்திற்காக 2026-27 நிதியாண்டில் ரூ 95,692.31 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது, இது கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாகும். மாநிலங்களின் பங்கையும் சேர்த்தால் மொத்தத் திட்ட மதிப்பு ரூ 1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "வேலைவாய்ப்புடன் கூடிய கண்ணியம்" என்ற கொள்கையின் அடிப்படையில், பணித்தளங்களில் சுத்தமான குடிநீர், நிழற்குடைகள் மற்றும் முதலுதவி வசதிகள் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் பணித்தளங்களில் குழந்தைப் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இச்சட்டம் கிராமப்புற இந்தியாவை நவீன, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற மற்றும் உற்பத்தித் திறன் கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259691&reg=3&lang=1

***

SS/EA/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2259841) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR , Bengali , Gujarati , Malayalam