பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி ராணுவ மருத்துவமனை சார்பில் சர்வதேச கண் மருத்துவ ஆராய்ச்சி மாநாடு – பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தொடங்கிவைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2026 1:46PM by PIB Chennai

புதுதில்லி  ராணுவ மருத்துவமனை சார்பில் முதலாவது சர்வதேச கண் மருத்துவ ஆராய்ச்சி மாநாடு புதுதில்லியில் உள்ள மானக்ஷா மாநாட்டு மையத்தில் நாளை (09.05.2026) தொடங்கவுள்ளது.  இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டைப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தொடங்கிவைக்கிறார். இதில் முப்படைகளின் தளபதி, ராணுவம்,  விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் தலைமை தளபதிகள், பாதுகாப்புத்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் உள்ள 200-க்கம் மேற்பட்ட  புகழ்பெற்ற கண் மருத்துவர்களும், ராணுவ மருத்துவமனைகளில் பணிபுரியும் கண் சிகிச்சை நிபுணர்களும் பங்கேற்க உள்ளனர். கண் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவு, சென்னை சங்சர நேத்ராலயா, அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்ட புகழ்பெற்ற கண் சிகிச்சை மையங்களைச் சேர்ந்த மருத்துவர்களும் பேராசிரியர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சர்வதேச அளவில் புகழ் பெற்ற கண் மருத்துவர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர்  ஹர்மிந்தர் சிங் துவா, சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் கொலின் சியாங் உள்ளிட்டோரும் இதில் கலந்து  கொள்ள உள்ளனர். கண் மருத்துவத்துறையில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த இரண்டு நாள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258999&reg=3&lang=1

***

SS/PLM/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259125) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR