இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு கூட்டமைப்பு மாநாடு சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான தயாரிப்புப் பணிகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும் – மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2026 5:24PM by PIB Chennai
இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட 37 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து எதிர்காலத்திற்கான நாட்டின் விளையாட்டு திட்ட வரைவு குறித்தும், நடப்பாண்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விளையாட்டு போட்டிக்களுக்கான வீரர்களின் தயார்நிலை குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் மாநாட்டில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வீரர்களை தயார் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த நடவடிக்கை என்றுஅவர் கூறினார். நீண்ட கால திட்டமிடல் அறிவியல் ரீதியிலான பயிற்சி முறைகள், வலுவான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று திறனை வெளிப்படுத்தும் வகையில் வீரர்களுக்கு ஆதரவளித்தல் போன்றவற்றின் மூலம் விளையாட்டுத்துறையில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
சிறந்த நிர்வாக நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்திய அவர், நாட்டின் விளையாட்டிற்கான எதிர்காலம் என்பது விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்கங்னகளின் கூட்டமைப்புகள் மற்றும் அரசுகளுக்கு இடையேயான வலுவான ஒருங்கிணைப்பை முழுமையாக சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டமைப்புகளுக்குள் நடைபெறும் நிர்வாக செயல்பாடுகள். விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து குறித்த விழிப்புணர்வு, கல்வி, மற்றும் கடுமையான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மூலம் அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் அகற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258766®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2258843)
வருகையாளர் எண்ணிக்கை : 8