உள்துறை அமைச்சகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எல்இடி திரைகளுடன் கூடிய வாகனங்கள் தொடங்கி வைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2026 4:48PM by PIB Chennai
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எல்இடி திரைகளுடன் கூடிய வாகன சேவைகளை புதுதில்லியில் இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டத்தில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள ஜன்கானா பவனில் 6 விழிப்புணர்வு வாகனங்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு வாகனங்கள் தில்லி மற்றும் தேசிய தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்பது, சுயபதிவு வசதிகள் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முக்கிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் குறித்த பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதுடன் கணக்கெடுக்கும் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதுதில்லி நகராட்சிக் குழுமம் மற்றும் கண்டோன்ட்மென்ட் வாரியப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சுயவிவர கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்தததையடுத்து, இதில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கியது. இந்தப் பணிகள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் நிறைவடையும்.
தில்லி, மற்றும் தேசிய தலைநகரையொட்டிய பகுதிகளில் சுய விவரங்களை கணக்கெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மே 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இதற்கான அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக தங்களது சுயவிவரங்களை சமர்ப்பிக்கலாம். இதனைத் தொடர்ந்து மே 16-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வீடுகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258743®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2258839)
வருகையாளர் எண்ணிக்கை : 5