குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்கள் மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAY 2026 10:52AM by PIB Chennai

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் முன்னோடி திட்டமான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்  காதி மற்றும் கிராமப்புறத் தொழில்துறை ஆணையத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.

விவசாயம் சாராத தொழில்களுக்கு வங்கிக் கடன் அளிக்கும் வகையில் முன்கூட்டியே வங்கியில் செலுத்த வேண்டிய ரொக்கத் தொகைக்கு மானியத் தொகை வழங்குவதன் மூலம் புதிய சிறுதொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு இத்திட்டம் ஆதரவு அளிக்கிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் நீடித்த வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதையும் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கான சுயவேலைவாய்ப்பை உருவாக்குவதையும் இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2021-22-ம் நிதியாண்டு முதல் 2025-26-ம் நிதியாண்டு வரையிலான 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதுடன் நாட்டின் சிறு தொழில்களுக்கான சூழல்அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் 4,02,000 சிறுதொழில்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற இலக்கை செயல்படுத்துவதற்காக பட்ஜெட்டில் ரூ.13,554.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் 4,03,706 சிறு தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொழில் முனைவோர்  தலைமையிலான முன்முயற்சியின்  தேவையை பூர்த்தி செய்வதில் இத்திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை பிரதிபலிக்கிறது.   

36,33,000 தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதன் மூலம் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவில் இத்திட்டம் பங்களித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258590&reg=3&lang=1

***

SS/SV/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2258742) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Kannada