பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAY 2026 4:45PM by PIB Chennai
மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கைகள், பல்வேறு துறைகளில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்கள்.
தற்போதைய எரிபொருள் விநியோகச் சூழல் குறித்தும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி தடையற்ற முறையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. எல்பிஜி சிலிண்டரை மாற்று இடத்திற்கு திருப்பி விடுவதை தடுக்கும் வகையில், விநியோக அங்கீகார குறியீடு அடிப்படையிலான விநியோகம் சுமார் 95 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் தொடர்பாக 10,400-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 2026 ஏப்ரல் 3–ம் தேதி இம்முகாம்கள் தொடங்கப்பட்டது முதல் 1,84,000-க்கும் அதிகமான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனையாகியுள்ளன. எல்பிஜி சிலிண்டரை பதுக்குவதையும் கள்ளச்சந்தையில் விற்பதையும் தடுக்க நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்று 2,100-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையில் 366 எல்பிஜி விநியோக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 75 எல்பிஜி விநியோக நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் 87.28 லட்சத்துக்கும் மேற்பட்ட எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அப்பிராந்தியத்தில் இந்திய கடற்பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் இந்திய கப்பல்களில் எந்தவிதமான சம்பவமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எல்லை வழியாக ஈரானிலிருந்து 2,520 இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உதவியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258402®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2258499)
வருகையாளர் எண்ணிக்கை : 9