தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள்: மேற்கு வங்கத்தின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 91.66% வாக்குகள் பதிவாகியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 29 APR 2026 8:35PM by PIB Chennai

மேற்கு வங்க சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான இரண்டாவது  கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கியது. மாலை 7:45 மணி நிலவரப்படி, 142 தொகுதிகளில் 91.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 23-ஆம் தேதி  நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில், 93.19% வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்டங்களின் ஒருங்கிணைந்த வாக்குப்பதிவு சதவீதம் 92.47% ஆக உள்ளது. இதற்கு முன்னர், மேற்கு வங்கத்தில் கடந்த 2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிகபட்சமாக  84.72% வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இரண்டாவது கட்ட தேர்தலில், 91.07 % ஆண் வாக்காளர்களும், 92.28%  பெண் வாக்காளர்களும், 91.28 % மூன்றாவது பாலினத்தவரும் வாக்களித்தனர். இரண்டு கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் பதிவாகியுள்ள 92.47% வாக்குகளில், ஆண் வாக்காளர்களின் பங்களிப்பு 91.74%, பெண் வாக்காளர்களின் பங்களிப்பு 93.24% ஆகும். மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில்  உள்ள 6.81  கோடி வாக்காளர்களில், 3.49  கோடி ஆண்களும், 3.33 கோடி பெண்களும், 1,257  மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, மேற்கு வங்கத்தில் மொத்தம் (இரண்டு கட்ட தேர்தல்களிலும் சேர்த்து) 85,377  வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 294 தொகுதிகளுக்கு 2,926 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 4,26,885  வாக்குச்சாவடி ஊழியர்களும், 3,35,493  வாக்குச்சாவடி முகவர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். 

இரண்டாவது கட்ட தேர்தலில் 5,343  வாக்குச்சாவடிகள் தொடர்பான தரவுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256756&reg=3&lang=1

(Release ID: 2256756)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2256782) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Bengali , Gujarati