பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தமிழ்நாட்டில், பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு 2.0 அடிப்படையில், ஒன்பது கருப்பொருட்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட கிராமப்புற பஞ்சாயத்துகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புக்களின் செயல்திறன் குறித்த மதிப்பீட்டு அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
29 APR 2026 4:34PM by PIB Chennai
அடிப்படை நிலையிலான நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று 'தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக்' கொண்டாட்டத்தையொட்டி, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2023–24-ம் நிதியாண்டிற்கான 'பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு 2.0' தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு 'செயல்திறன் அறிக்கையாக' உள்ள இந்த அறிக்கை, (ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில்) 3,635 கிராமப்புற பஞ்சாயத்துகள் 'முன்னோடி' நிலையில் உள்ள அமைப்புக்கள் என்ற பிரிவிலும், 1,18,824 கிராமப்புற பஞ்சாயத்துகள் (பங்கேற்ற கிராம பஞ்சாயத்துகள்/பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 45.72%) 'சிறந்து செயல்படும்' பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகள் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ள முக்கிய கருப்பொருள்களில், 'வறுமை இல்லாத நிலை மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரங்கள் கொண்ட பஞ்சாயத்து' மற்றும் 'ஆரோக்கியமான பஞ்சாயத்து' ஆகியவை அடங்கும். 'கருப்பொருள் 1: வறுமையற்ற மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரங்கள் கொண்ட பஞ்சாயத்து அமைப்புகள்' என்ற வகைப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் மொத்தம் 3,313 கிராமப்புற பஞ்சாயத்துகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகள் 'ஏ+' என்ற தரவரிசையைப் பெற்றுள்ளன. இது பஞ்சாயத்து அளவில், வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார உருவாக்கத்தில், அவை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க செயல்திறனைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அதேபோன்று, 'கருப்பொருள் 2: ஆரோக்கியமான பஞ்சாயத்துகள்' என்ற பிரிவின் கீழ், மொத்தம் 1,015 கிராமப்புற பஞ்சாயத்துகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகள் 'ஏ+' என்ற தரவரிசையைப் பெற்றுள்ளன. இது நோய்த்தடுப்பு மருத்துவம், ஊட்டச்சத்து விழிப்புணர்வு, சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய நடவடிக்கைகளில் அவை அடைந்துள்ள வலுவான செயல்திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.
2023-24-ம் நிதியாண்டில், பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு .2.0 தரநிலைகளின்படி வகைப்படுத்தப்பட்ட, மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியான கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகள் அல்லது அதற்கு இணையான அமைப்புகளின் எண்ணிக்கை.
|
தமிழ்நாடு
|
|
வ. எண்
|
மாநிலம் / யூனியன் பிரதேசம்
|
கிராமப்புற பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை / கிராமப்புற பஞ்சாயத்திற்கு இணையானவை
|
தரவுகளைச் சமர்ப்பித்த கிராமப்புற பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை*
|
ஏ+ (90-100)
|
ஏ (75-90-க்கும் கீழ்)
|
பி (60-75-க்கும் கீழ்)
|
சி (40-60-க்கும் கீழ்)
|
டி (40-க்கும் குறைவாக)
|
|
28
|
12,482
|
12,482
|
-
|
|
197
|
10,520
|
1,746
|
19
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழ்நாட்டில் சிறப்பான செயல்திறன் கொண்டகிராமப்புற பஞ்சாயத்துகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகள்
|
தமிழ்நாடு
|
|
மொத்தமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை
|
மொத்தமுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கை
|
மொத்தமுள்ள கிராமப்புற பஞ்சாயத்துக்கள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புக்களின் எண்ணிக்கை
|
கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டகிராமப்புற பஞ்சாயத்துக்கள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புக்களின் மொத்த எண்ணிக்கை
|
|
37
|
388
|
12482
|
12482
|
தமிழ்நாட்டின் சிறப்பான செயல்திறன் கொண்ட கிராமப்புற பஞ்சாயத்தாக காடுவெட்டிவிடுதியும், சிறந்த தொகுதியாக திவோணம் உள்ளாட்சி அமைப்பும், சிறந்த மாவட்டமாக தஞ்சாவூரும், ஏ என்ற தரநிலையை பெற்றுள்ளது. இவை பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு 2.0 மதிப்பீடுகளின் படி 81.௦௧ மதிப்பெண்களை பெற்றுள்ளது.
தரவரிசையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற பஞ்சாயத்துகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகள் ஒட்டுமொத்தமாக 60 முதல் 75 மதிப்பெண்களுடன் பி என்ற தரநிலையை 10,520 உள்ளாட்சி அமைப்புகளும், 40 முதல் 60 மதிப்பெண்களுடன் சி என்ற தரநிலையை 1,7146 உள்ளாட்சி அமைப்புகளும் பெற்றுள்ளன.
தமிழகத்தில், கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட கிராமப்புற பஞ்சாயத்துகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிகை விபரம் பின்வருமாறு:
|
|
மிகச் சிறப்பு (ஏ+)
|
சிறப்பு (ஏ)
|
நன்று (பி)
|
பரவாயில்லை (சி)
|
மோசம் (டி)
|
|
கருப்பொருள் 1:
|
0
|
4368
|
6078
|
1915
|
0
|
|
கருப்பொருள் 2:
|
0
|
5398
|
5933
|
1037
|
0
|
|
கருப்பொருள் 3:
|
0
|
651
|
5540
|
6064
|
0
|
|
கருப்பொருள் 4:
|
0
|
3385
|
6202
|
2604
|
0
|
|
கருப்பொருள் 5:
|
0
|
0
|
4045
|
7249
|
893
|
|
கருப்பொருள் 6:
|
0
|
6171
|
5152
|
1034
|
0
|
|
கருப்பொருள் 7:
|
0
|
4678
|
6823
|
954
|
0
|
|
கருப்பொருள் 8:
|
0
|
1337
|
9468
|
1465
|
0
|
|
கருப்பொருள் 9:
|
0
|
|
2525
|
9580
|
0
|
கருப்பொருள் வாரியாக தமிழ்நாட்டில் சிறப்பான செயல்திறம் கொண்ட கிராமப்புற பஞ்சாயத்துகள் அல்லது பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகள் விபரங்கள் பின்வருமாறு:
|
கருப்பொருள் பெயர்
|
கிராமப்புற பஞ்சாயத்துகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகள்
|
தொகுதி
|
மாவட்டம்
|
கருப்பொருள் மதிப்பெண்
|
கருப்பொருள் தரநிலை
|
|
டி1. வறுமை இல்லாத நிலை மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரம் கொண்ட பஞ்சாயத்து அமைப்புகள்
|
ஆங்கியம்
|
உப்பிலியபுரம்
|
திருச்சிராப்பள்ளி
|
97.25
|
ஏ+
|
|
டி2. ஆரோக்கியமான பஞ்சாயத்து அமைப்புகள்
|
உய்யக்கொண்டரவி
|
கம்மாபுரம்
|
கடலூர்
|
91.33
|
ஏ+
|
|
டி3. சிறார்களுக்கு உகந்த பஞ்சாயத்து அமைப்புகள்
|
அழியாநிலை
|
அறந்தாங்கி
|
புதுக்கோட்டை
|
90.96
|
ஏ+
|
|
டி4. சிறார்களுக்கு உகந்த பஞ்சாயத்து அமைப்புகள்
|
மேல்முட்டுக்கூர்
|
குடியாத்தம்
|
வேலூர்
|
94
|
ஏ+
|
|
டி5. தூய்மை மற்றும் பசுமையான பஞ்சாயத்து அமைப்புகள்
|
கீழப்பெருங்காவூர்
|
லால்குடி
|
திருச்சிராப்பள்ளி
|
93.63
|
ஏ+
|
|
டி6. பஞ்சாயத்து அமைப்புக்களில் சுயசார்பு உள்கட்டமைப்பு வசதிகள்
|
ஊரணித்தாங்கல்
|
செஞ்சி
|
விழுப்புரம்
|
92.22
|
ஏ+
|
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2256757)
வருகையாளர் எண்ணிக்கை : 22