பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 29 APR 2026 5:42PM by PIB Chennai

மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கை, அப்பிராந்தியத்தில் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் உதவி, பல்வேறு துறைகளில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

தற்போதைய எரிபொருள் விநியோகச் சூழல், மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் விளக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களை அதிக அளவில்  வாங்கி  இருப்பு வைப்பதை  குடிமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.  பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. வதந்திகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்களை அறியுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எல்பிஜி நுகர்வோர்கள், டிஜிட்டல் பதிவு தளத்தைப் பயன்படுத்துமாறும் விநியோக அலுவலகத்தை அணுகுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குழாய் வழி இயற்கை எரிவாயு மற்றும்  மின்சார  அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருள் பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் அனைத்து குடிமக்களும் தங்களுடைய  அன்றாட பயன்பாட்டில் எரிசக்திப் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலை மாற்றமின்றி உள்ளது. நாட்டின் அனைத்துப் பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுவது குறித்து துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நில எல்லை வழியாக இதுவரை 2,464 இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேறுவதற்கு டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256651&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2256709) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam