பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தில் "சாந்தி" சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 DEC 2025 9:47PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் "சாந்தி" சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இது இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் என்று அவர் விவரித்துள்ளார்.

இந்த மசோதாவிற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள பிரதமர், இது செயற்கை நுண்ணறிவை  பாதுகாப்பாக வலுப்படுத்தவும், பசுமை உற்பத்தியை சாத்தியப்படுத்தவும் உதவும் என்று கூறினார். மேலும், இது இந்தியாவிற்கும் உலகிற்கும் தூய்மையான எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாந்தி மசோதா தனியார் துறைக்கும், இளைஞர்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்று குறிப்பிட்ட திரு. மோடி, இந்தியாவில் முதலீடு செய்யவும், புதுமைகளைப் படைக்கவும் மற்றும் கட்டமைக்கவும் இதுவே சரியான தருணம் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் தனது எக்ஸ்  தளத்தில், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சாந்தி மசோதா நிறைவேற்றப்பட்டது நமது தொழில்நுட்ப துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும். மசோதா நிறைவேற ஆதரவளித்த எம்.பி-க்களுக்கு எனது நன்றிகள். பாதுகாப்பான முறையில் செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துவது முதல் பசுமை உற்பத்தியைச் சாத்தியப்படுத்துவது வரை, இது தேசத்திற்கும் உலகிற்கும் ஒரு தூய்மையான எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய தீர்க்கமான உத்வேகத்தை அளிக்கிறது. இது தனியார் துறைக்கும் நமது இளைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியாவில் முதலீடு செய்யவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் மற்றும் கட்டமைக்கவும் இதுவே மிகச் சரியான நேரம்!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206295&reg=3&lang=2-

---- 

TV/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2250377) வருகையாளர் எண்ணிக்கை : 61