தேர்தல் ஆணையம்
அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் மத்திய பார்வையாளர்களுக்கு நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் விவரித்தது
இடுகை இடப்பட்ட நாள்:
01 APR 2026 4:14PM by PIB Chennai
அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு 2026 ஏப்ரல் 9 அன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ் எஸ் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து மத்திய பார்வையாளர்களுக்கான (பொது, காவல், செலவினம்) ஆய்வுக் கூட்டத்தை இன்று நடத்தினார்.
காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் மொத்தம் 282 மத்திய பார்வையாளர்கள் பங்கேற்றனர். இதில் பொதுப் பார்வையாளர்கள் 119 பேரும், காவல்துறை பார்வையாளர்கள் 56 பேரும், செலவினப் பார்வையாளர்கள் 107 பேரும் அடங்குவர்.
தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் எவ்வித தூண்டுதலும், வன்முறையும், அச்சுறுத்தலுமின்றி நடைபெறுவதை பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. தேர்தல் நடத்தை நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறும், வன்முறைகள் குறித்த புகார் ஏதேனும் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையம் வலியுறுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247752®=3&lang=1
***
AD/IR/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2247866)
வருகையாளர் எண்ணிக்கை : 23