தேர்தல் ஆணையம்
தேசிய, மாநிலக் கட்சிகள் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியில் கட்டணமின்றி ஒலிபரப்பு / ஒளிபரப்பு செய்ய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் முறையில் நேர ஒதுக்கீடு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAR 2026 1:43PM by PIB Chennai
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 39A-ன் கீழ், இந்தியத் தேர்தல் ஆணையம், அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தலையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு / ஒளிபரப்பு செய்ய நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில அரசியல் கட்சிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் தளம் மூலம் டிஜிட்டல் முறையில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள் முன்னதாக, ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் தேதி ஆகியவற்றிற்கு இடையே ஒலிபரப்பு/ஒளிபரப்பு நேரம் வகைப்படுத்தப்படும்.
சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச நிலையில் குலுக்கல் முறையில் நேர ஒதுக்கீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கட்சிக்கும் மாநிலத்தின் பிராந்திய அலைவரிசையில் 45 நிமிடங்கள் ஒலிபரப்பு/ஒளிபரப்பு செய்ய நேரம் ஒதுக்கப்படும்.
சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் முந்தைய சட்டப்பேரவை தேர்தல்களில், தேர்தல் செயல்பாடுகள் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் உரிய வழிகாட்டுதல்களின்படி தங்களது பதிவுகளை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. ஒலி / ஒளிப்பதிவுகள் பிரசார் பாரதி நிறுவனம் நிர்ணயித்துள்ள தொழில்நுட்ப தரநிலைகளை பூர்த்தி செய்யும் ஒலிப்பதிவு கூடங்களிலோ அல்லது தூர்தர்ஷன் / அகில இந்திய வானொலி நிலையத்திலோ நடைபெறும். அத்துடன் துர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் இரண்டு குழு விவாதங்களுக்கும் பிரசார் பாரதி ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு பிரதிநிதியை நியமிக்கலாம். அதை அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் நெறிப்படுத்துவார்.
***
AD/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2243906)
வருகையாளர் எண்ணிக்கை : 34