பிரதமர் அலுவலகம்
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2026 10:54PM by PIB Chennai
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றி அவர்களது அளப்பரிய செயல்திறன், மனஉறுதி, குழு செயல்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் முழுவதும் இந்திய அணி தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனதிலும், பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் நிரப்பியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ்தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“சாம்பியன்ஸ்!
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
இந்த மகத்தான வெற்றி இந்திய அணியின் அளப்பரிய செயல்திறன், மனஉறுதி, குழு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் முழுவதும் இந்திய அணி தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றி இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனதிலும், பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் நிரப்பியுள்ளது.
சிறப்பான ஆட்டம், இந்திய அணி!”
----
(Release ID: 2236755)
TV/SV/RJ/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2243100)
வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam