பிரதமர் அலுவலகம்
கோவாவின் கனகோனாவிற்கான தனது பயணத்தின் முக்கிய காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2025 10:11PM by PIB Chennai
ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550வது ஆண்டு விழாவான ‘சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ’ நிகழ்வை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி கோவாவின் கனகோனாவிற்கு வருகை தந்ததன் காட்சிகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தில் வெண்கலத்தால் ஆன 77 அடி உயர பிரபு ஸ்ரீ ராமரின் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும் ஜீவோட்டம் மடம் உருவாக்கியுள்ள ராமாயண நிகழ்வுகளை சித்தரிக்கும் பூங்கா தோட்டத்தையும் அவர் திறந்து வைத்தார். சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
இந்தப் பயணம் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெவ்வேறு பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், கனகோனாவில் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சியாக அமைந்தது. அதன் சில முக்கிய காட்சிகளை இங்கே பகிர்கிறேன்."
"ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தில் பிரபு ஸ்ரீ ராமரின் 77 அடி உயர சிலையை திறந்து வைத்தேன். எல்லா இடங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து, இந்த சிலையைப் பார்வையிடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது நிச்சயமாக ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்."
----
(Release ID: 2196153)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2242096)
வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Telugu
,
Kannada
,
Malayalam