பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச ஆரிய மகா சம்மேளன மாநாட்டில் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2025 10:32PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச ஆர்ய மகா சம்மேளன மாநாடு 2025-ல் தாம் ஆற்றிய உரையின் சில முக்கியப் பகுதிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகள்:
"சர்வதேச ஆரிய மகா சம்மேளன மாநாடு தெய்வீக பாரம்பரியத்தாலும் புதிய ஆற்றலாலும் உத்வேகத்தாலும் நிரம்பி இருக்கிறது."
"ஆரிய மகா சம்மேளனத்தில் எங்கள் மகள்கள் சமஸ்கிருதத்தில் ஆன்மீக மந்திரங்களை ஓதிய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது."
"மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ₹200 நாணயத்தையும், ஆரிய சமாஜத்தின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நினைவு நாணயத்தையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்."
"ஆரிய சமாஜம் நிறுவப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடையும் தெய்வீக நிகழ்வு சமூகத்தின் ஒரு பிரிவோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மாறாக அது சமூக சீர்திருத்தத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு பெரிய மரபின் அடையாளமாகும்."
"மகரிஷி தயானந்த சரஸ்வதி அடிமைத்தன காலத்தில் தேசிய உணர்வை எழுப்பிய ஒரு சிறந்த ஆளுமை. இந்தியா முன்னேற வேண்டுமென்றால், தீண்டாமை, சாதிப் பாகுபாடு, கல்வியறிவின்மை ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார்."
----
(Release ID: 2184984)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2241295)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam