பிரதமர் அலுவலகம்
அரசியல் சாசன தினத்தன்று பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டதற்குப் பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
26 NOV 2025 10:50PM by PIB Chennai
அரசியல் சாசன தினத்தன்று பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் டாக்டர் அம்பேத்கரின் முக்கியப் பங்கிற்குச் செலுத்தும் பொருத்தமான மரியாதை என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அரசியல் சாசன தினத்தில், பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது மிகுந்த பெருமைக்குரிய விஷயம். இது டாக்டர் அம்பேத்கருக்கும், நமது அரசியலமைப்பை உருவாக்குவதில் அவரது பங்கிற்கும் செலுத்தப்படும் ஒரு பொருத்தமான மரியாதை. அவரது எண்ணங்களும் லட்சியங்களும் எண்ணற்ற மக்களுக்கு வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.”
----
(Release ID: 2195094)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2241214)
आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam