பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2025 10:43PM by PIB Chennai

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீசைச் சந்தித்துப் பேசினார். 2020-ம் ஆண்டில் விரிவான உத்திசார் ஒத்துழைப்பு உறவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு விரிவடைந்து பன்முகப்படுத்தப்பட்டதில் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் கண்டனம் தெரிவித்து, இந்தியாவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த தலைவர்கள் உறுதிபூண்டனர்.

பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, முக்கியமான கனிமங்கள், தொழில்நுட்பம், கல்வி, மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு பிரதமர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

-----

(Release ID: 2192775)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2241202) வருகையாளர் எண்ணிக்கை : 7