பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

க்யூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளதற்குப் பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2025 9:22PM by PIB Chennai

கடந்த பத்து ஆண்டுகளில் க்யூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சாதனை அதிகரிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். ஆராய்ச்சியிலும் புதுமைகளிலும் கவனம் செலுத்தி, நமது இளைஞர்களுக்கு தரமான கல்வியை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கடந்த பத்து ஆண்டுகளில் க்யூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில் சாதனை அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்தி, நமது இளைஞர்களுக்கு தரமான கல்வியை வழங்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியா முழுவதும் அதிகமான கல்வி நிறுவனங்களை செயல்படுத்துவதன் மூலம் திறன்களையும் நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்."

----

(Release ID: 2186474)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240910) வருகையாளர் எண்ணிக்கை : 5