ஜல்சக்தி அமைச்சகம்
கிராமப்புற குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு தனித்துவ அடையாள அட்டையை மத்திய ஜல்சக்தி அமைச்சர் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2026 4:18PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு. சி. ஆர். பாட்டீல் தலைமையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொது சுகாதார பொறியியல் துறை, கிராமப்புற நீர் வழங்கல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் அமைச்சர்களுடன் ஜல் ஜீவன்இயக்கம் 2.0 -ஐ செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு. வி. சோமண்ணா மற்றும் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேம்பட்ட ஒதுக்கீடு மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன் ஜல் ஜீவன் இயக்கம் 2.0 -ஐ 2028 டிசம்பர் வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னணியில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
கிராமப்புற குழாய் நீர் வழங்கல் சொத்துக்களின் முழுமையான டிஜிட்டல் மேப்பிங் செய்ய உதவும் திட்டத்தின் அடிப்படையிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைகளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு பாட்டீல் வெளியிட்டார். நாட்டில் முதன்முறையாக, ஒவ்வொரு கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கும் டிஜிட்டல் அடையாளம் ஒதுக்கப்பட்டு, கிராமப்புற நீர் வழங்கல் முறையை ஒரு ஒருங்கிணைந்த தேசிய தளத்திற்கு கொண்டு வருகிறது. இதுவரை, 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 1.64 லட்சம் சுஜாலம் கான் அடையாள அட்டைகள் 67,000 சுஜாலம் பாரத் அடையாள அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுஜலம் பாரத் ஐடி திட்டத்தின் உள்கட்டமைப்பு ஐடி மற்றும் சேவை பகுதி ஐடி ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது, இது கிராமப்புற நீர் வழங்கல் சேவை விநியோகத்தின் விரிவான டிஜிட்டல் தடத்தை உருவாக்குகிறது. இந்த முன்முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சீர்திருத்தத்தை குறிக்கிறது-
ஜல்சக்தி அமைச்சர் உரையாற்றியபோது, திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதிசெய்து, கள கண்காணிப்பை வலுப்படுத்துமாறு மாநிலங்களை வலியுறுத்தினார். கிராமப்புற வீடுகளுக்கு நம்பகமான குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதில் மாநில அரசுகளின் பொறுப்பில் இந்த இயக்கத்தின் வெற்றி அடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
சில மாநிலங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்துரைத்த அவர், அதிகப்படியான அல்லது தொழில்நுட்ப ரீதியாக இணங்காத பணிகளின் விளைவாக ஏற்படும் எந்தவொரு செலவினத்தையும் அந்தந்த மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கிராமப்புற நீர் வழங்கல் அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், செலவின வரம்புகள் மற்றும் முறையான மூல மதிப்பீடு ஆகியவற்றை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை அவர் வலியுறுத்தினார். பருவகால பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளில் நீர் சேமிப்பு மற்றும் ரீசார்ஜ் முயற்சிகளை விரிவுபடுத்த மாநிலங்களை அவர் ஊக்குவித்தார்.
நீரின் தரத்தைப் போலவே பணியின் தரமும் முக்கியமானது என்று அவர் கூறினார். எனவே, பணியின் தரத்தைப் பராமரிப்பதில் மாநிலங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவற்றை விரைவாக முடிப்பதற்கான காலக்கெடுவிற்குள் திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.. அமைச்சரவை ஒப்புதல் அளித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகும் என்றும் அவை எழுத்திலும் உணர்விலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239620®=3&lang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239875)
வருகையாளர் எண்ணிக்கை : 11