பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சி வெற்றி பெற்றதற்கு திரு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2026 12:13PM by PIB Chennai

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சியை உறுதியான வெற்றிக்கு இட்டுச் சென்றதற்காக திரு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனநாயக  நடைமுறையுடன், முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய பங்களாதஷுக்காக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். "நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை மேம்படுத்தவும் திரு தாரிக் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சியை உறுதியான வெற்றிக்கு இட்டுச் சென்ற திரு தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி பங்களாதேஷ் மக்கள் உங்கள் தலைமையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஜனநாயக ரீதியான, முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய பங்களாதேஷுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

 

நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை மேம்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227381&reg=3&lang=1  

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2239753) வருகையாளர் எண்ணிக்கை : 28