நிதி அமைச்சகம்
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட சோதனையில் ஆந்திரப்பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மருந்து உற்பத்தி ஆலையிலிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2026 10:36AM by PIB Chennai
ஆந்திரப்பிரதேசத்தில் வொயிட் ஹேமர் என்ற பெயரில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நடவடிக்கைகைளின் போது, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையிலிருந்து 47 கோடி ரூபாய் மதிப்பிலான 237 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் மூன்றரை டன்னுக்கும் அதிகமான ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செயற்கை மருந்துகளில் சட்டவிரோத உற்பத்தியைத் தடுக்கும் வகையில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆந்திராவில் உள்ள என்டிஆர் மாவட்டத்தில் கொண்டப்பள்ளி தொழில்துறை மேம்பாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தொழிற்சாலையை கண்டறிந்துள்ளது. ரசாயன உற்பத்தி என்ற பெயரில் கவலை, பீதி, மனஅழுத்தம் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் அல்பிரோசம் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த சோதனையின் போது அந்தத் தொழிற்சாலையிலிருந்து 800 கிலோவுக்கும் அதிகமான மூலப்பொருட்கள் 2,860 லிட்டர் பல்வேறு ரசாயனப் பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில், வருவாய், புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 8 நிறுவனங்கள் கண்டறிந்து தடை செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் அது தொடர்பான அச்சத்தைக் களையும் வகையிலும் சமூகத்தையும் மக்களையும் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகளை இது எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239382®=3&lang=1
***
AD/SV/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2239543)
வருகையாளர் எண்ணிக்கை : 7