புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, உலகளவிலான ஒத்துழைப்பின் வலிமையைப் பிரதிபலிப்பதாக உள்ளது: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

प्रविष्टि तिथि: 12 MAR 2026 11:28AM by PIB Chennai

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு  பிரல்ஹாத் ஜோஷி, சூரிய சக்தி குறித்த உலகளவிலான உத்வேகமும், உலகம் முழுவதும் தூய்மையான எரிசக்தி உற்பத்தியை  விரைவுபடுத்துவதில் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்தும் விரிவாக  எடுத்துரைத்தார். மார்ச் 11 - ம் தேதி, புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் நிறுவன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டுப் பேசிய அமைச்சர், சூரிய சக்தி மூலம் நீடித்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில்,தொலைநோக்குப் பார்வை மற்றும் உலக நாடுகளின் ஒத்துழைப்பிற்கான வலிமையை பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறினார்.

120 - க்கும் அதிகமான நாடுகளின் கூட்டமைப்பாக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு விரிவடைந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, உலக நாடுகளின் நலன்களுக்காக, சூரிய சக்தியை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் துணிச்சலான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா-பிரான்ஸ் நாடுகள் ஒன்றிணைந்ததாக திரு  ஜோஷி குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடியத் தலைமைப் பண்பு, இந்த யோசனையை உலகளாவிய இயக்கமாக மாற்ற உதவியது என்று அவர் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில், சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, உலகம் முழுவதிலும் தூய்மை எரிசக்திப் பயன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிய சக்தியை மிக முக்கியமான இடங்களில் பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, உலகளவில் எரிசக்திப்  பயன்பாட்டில் மாற்றத்தை உருவாக்கி, வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான உத்வேகம் அளிப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238741&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2238839) आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada , Malayalam