விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் ரூபாய் 894 கோடி மதிப்பிலான பயிர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 5:16PM by PIB Chennai

தெலங்கானாவில் 2026 ரபி பருவத்தில் 1,25,855 மில்லியன் டன் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட வேண்டுமென்ற அம்மாநில அரசின் பரிந்துரைக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி 37,020 மில்லியன் டன் உளுந்து, 55,285 மில்லியன் டன் நிலக்கடலை, 3,690 மில்லியன் டன் சூரியகாந்தி உள்ளிட்டவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் ரூபாய் 894 கோடி மதிப்பிலான பயிர்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

விவசாயிகள் அவர்களுடைய கடின உழைப்பிற்கேற்ப முழு விலையை பெறுவதை உறுதி செய்வதையும், சந்தை ஏற்றஇறக்கங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கப்பதையும், மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது என்று திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238341&reg=3&lang=1

 

****

TV/IR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2238484) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Telugu