தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரைப்பட உள்ளடக்க மேம்பாடு சினிமா மற்றும் படைப்பாற்றல் திறமையை மேம்படுத்த நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 2:42PM by PIB Chennai

மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திரைப்பட உள்ளடக்க மேம்பாடு, தகவல் தொடர்பு மற்றும் பரவல் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

திரைப்பட உள்ளடக்க உருவாக்கம், புதுமை மற்றும் பரப்புதல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதில் தேசிய, சர்வதேச தளங்களில், இந்தியத் திரைப்படங்களை விளம்பரப்படுத்த ஏதுவாக, திரைப்பட விழாக்களை ஏற்பாடு செய்தல், பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் அடங்கும். அதே நேரத்தில், இந்தியத் திரைப்படத் துறையின் தெரிவுநிலை மற்றும் உலகளவிலான நடவடிக்கைகளை மேம்படுத்த, திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படம் தொடர்பான நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இது இந்தியாவின் திரைப்பட பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், மீட்டமைத்தல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. மேலும் இத்திட்டம், இந்தியாவில் ஆடியோ-விஷுவல் கூட்டு தயாரிப்பு மற்றும் சர்வதேச திரைப்பட படப்பிடிப்புக்கான ஊக்கத்தொகைகளை வழங்குகிறது.

திரைப்படத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களிடையே தொடர்புகளை எளிதாக்கும் வகையில், பல்வேறு திரைப்பட விழாக்கள், பயிற்சிப் பட்டறைகள், திரையிடல்கள், மாஸ்டர் வகுப்புகள் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மூலம், திரைப்பட உள்ளடக்க மேம்பாடு, தகவல் தொடர்பு மற்றும் பரப்புதல் திட்டத்தின் கீழ், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பிற படைப்பாற்றல் நிபுணர்களை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது.

இது தொடர்பான விரிவான விவரங்கள் https://www.nfdcindia.com மற்றும் https://mib.gov.in/en/offerings/schemes-monitoring ஆகிய இணையதள முகவரியில் காண முடியும்.

இத்திட்டத்தின் கீழ், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-22 முதல் 2026 பிப்ரவரி 26 அன்று வரை,ரூ 1,132.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில், ரூ 1,021.43 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், ஆண்டுதோறும் கோவாவில், சர்வதேச இந்திய திரைப்பட விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. இது போன்ற திரைப்படத் துறை மற்றும் அது தொடர்புடைய செயல்பாடுகளை ஊக்குவிக்க மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளையும் அமைச்சகம்  மேற்கொள்கிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238117&reg=3&lang=1

 

***

(Release ID: 2238117)

TV/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2238297) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam