சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் புதுமை மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு குறித்து பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் எடுத்துரைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2026 9:10AM by PIB Chennai

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளில் அதிகரித்து வரும் பங்கேற்புகளை மக்கள் பங்களிப்புக்கான சக்திவாய்ந்த உதாரணமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி வர்ணித்துள்ளார். கிராமங்கள், நகரங்கள் இரண்டையும் சேர்ந்த இந்திய இளைஞர்களின் விருப்பங்கள் நாட்டின் மிகப்பெரிய பலத்தையும் எதிர்காலத்திற்கான மிகவும் மதிப்புமிக்க மூலதனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இளம் இந்தியர்கள் புதுமைகளைப் புகுத்தவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதுமை சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், கல்வி முறையை தொடர்ந்து நவீனமயமாக்குவதன் முக்கியத்துவத்தையும், இந்த ஆலோசனைகளிலிருந்து வெளிப்படும் கருத்துக்களின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

 

பிரதமரின் தலைமையின் கீழ், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறந்த அணுகுமுறையை அரசு செயல்படுத்துவதாக சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா தெரிவித்தார். நலவாழ்வைத் தாண்டி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைப்பு வரை முன்னேறி, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குவதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அணுகுமுறையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

இந்த சிறப்பு அமர்வை இந்திய செயற்கை மூட்டு உற்பத்திக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பிரவீன் குமார் நெறிப்படுத்தினார். உதவி சாதனங்களின் விநியோகம், பொது இடங்கள் போன்ற அணுகக்கூடிய உள்கட்டமைப்பு போன்றவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மார்ச் 9, 2026 அன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்பம் சார்ந்த உள்ளடக்கத்தில் ஒரு முக்கியமான படியாக அமைந்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237298&reg=3&lang=1

 

(Release ID: 2237298)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237776) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada