சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆமை, முதலை கடத்தல் தொடர்பாக கான்பூரைச் சேர்ந்தவரை மத்தியப்பிரதேச புலிகள் அதிரடிப்படை கைது செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAR 2026 11:08AM by PIB Chennai

ஆமை, முதலை கடத்தல் தொடர்பாக  உத்தரப்பிரதேச மாநிலம்  கான்பூரைச் சேர்ந்த தாரக் நாத் கோஷ் என்பவரை வனவிலங்குகள் குற்றக்கட்டுப்பாட்டு  பிரிவின் ஒத்துழைப்புடன் மத்தியப்பிரதேச மாநில புலிகள் அதிரடிப்படை கைது செய்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். 3 வெவ்வேறு நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இவரது கடத்தலுக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், பீகார், ஒடிசா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும்  தொடர்பு இருந்துள்ளது. இந்தியா தவிர பங்களாதேஷ், தாய்லாந்து, மியான்மர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இவருக்கான தொடர்புகள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 

------

(Release ID 2236781)

AD/SMB/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2237001) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Telugu