PIB Headquarters
ஆயுதப் படைகளில் அதிகரிக்குப் பெண்களின் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2026 1:17PM by PIB Chennai
முக்கிய அம்சங்கள்
* 2014-ம் ஆண்டில் ஆயுதப்படைகளில் சுமார் 3,000 ஆக இருந்த பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை தற்போது 11,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
* தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பெண்களின் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மே 2025-ல் 17 பெண் கேடட்களும், நவம்பர் 2025-ல் 15 பெண் கேடட்களும் பட்டம் பெற்றனர்.
* பெண் அதிகாரிகள் இப்போது மூத்த தலைமை, செயல்பாட்டு கட்டளைப் பதவிகளை வகிக்கின்றனர், இதில் லெப்டினன்ட் ஜெனரல் பதவி, போர் விமானிகள், முக்கிய பிரிவுகளின் தளபதிகள் உள்ளனர்.
அறிமுகம்
சர்வதேச மகளிர் தினம், வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் பெண்களின் விரிவடையும் பங்குகள், வளர்ந்து வரும் தலைமைத்துவத்தைப் பற்றி சிந்தித்து அதை வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இவற்றில், இந்திய ஆயுதப் படைகளில் அவர்களின் வளர்ந்து வரும் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகத் தனித்து நிற்கிறது. செயல்பாட்டுக் கடமைகளிலிருந்து தலைமைப் பதவிகள் வரை, பெண்கள் நாட்டின் பாதுகாப்பு சூழலை வடிவமைத்து வருகின்றனர்.
இப்போது, ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் பெண் அதிகாரிகள் முடிவெடுக்கும் பொறுப்புகளை அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இது இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் உள்ளடக்கம், வலுப்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.
1958-ம் ஆண்டில், முதல் முறையாக, ஆண்களைப் போலவே பெண் மருத்துவர்களும் ராணுவ மருத்துவப் பிரிவில் இடம்பெற்றனர்
1992-ம் ஆண்டில், இந்திய ஆயுதப் படைகளில் பெண்களுக்கு அதிகாரிகள் நிலையிலான வாய்ப்புகள் திறக்கப்பட்டன. அதே ஆண்டில் மற்ற சேவைகளிலும் இணையான முன்னேற்றம் காணப்பட்டது. இந்திய கடற்படை முதன்முறையாக பெண் அதிகாரிகளை நியமித்தது. அதே நேரத்தில் இந்திய விமானப்படை விமான ஓட்டி, தொழில்நுட்ப, தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் பெண்களை குறுகிய சேவை அதிகாரிகளாக நியமிக்கத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக, 1992-ல் ஒரு தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டது.
ஆயுதப் படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெண்களிடையே தொழில் வாய்ப்புகள், தலைமை பண்பை விரிவுபடுத்துவதற்கு குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெண் அதிகாரிகள் இப்போது கர்னல் (தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை) பதவிக்கு பதவி உயர்வு பெற பரிசீலிக்கப்பட்டு, அவர்களுக்கு கட்டளை நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
உலகளாவிய அமைதி காக்கும் பணியில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளில் பெண் பணியாளர்களின் அதிகரித்து வரும் ஈடுபாட்டில் பிரதிபலிக்கிறது. 2025-ம் ஆண்டின் நடுப்பகுதியில், 154 க்கும் மேற்பட்ட இந்தியப் பெண்கள் ஆறு ஐநா அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றத் தொடங்கினர்.
பரந்த சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆயுதப் படையும் பெண்களை தலைமைப் பொறுப்புகளில் மேலும் அதிக அளவில் நியமிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236551®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2236723)
வருகையாளர் எண்ணிக்கை : 16