உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசரகால மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை சார்பில், மாநில அவசரகால செயல்பாட்டு மையங்களுடனான ஒருங்கிணைப்பு குறித்த 3-வது கருத்தரங்கம் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2026 4:53PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் பேரிடர் அபாயக் குறைப்புக்கான 10 அம்ச செயல்திட்டங்பளை ஊக்குவிக்கும் முயற்சியாக, உள்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த அவசரகால மீட்பு கட்டுப்பாட்டு அறை (ICR-ER), மாநில அவசரகால செயல்பாட்டு மையங்களுடன் (SEOCs) ஒருங்கிணைப்பு குறித்த 3-வது கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் இது நடத்தப்பட்டது. பேரிடர்களின் போது உயிரிழப்பு இல்லாத நிலை என்ற இலக்கை அடைவதே அரசின் முயற்சியாகும்.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில அவசரகால செயல்பாட்டு மையங்கள், பேரிடர்களைத் தணிக்க அயராது பாடுபடும் பிற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே கருத்தரங்கின் நோக்கமாகும். கருத்தரங்கின் போது, பேரிடர்கள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்வதில் நேரத்தைக் குறைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது. புகழ்பெற்ற விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் பல்வேறு பேரிடர் தொடர்பான எச்சரிக்கை அமைப்பு குறித்து மதிப்புமிக்க கருத்துகளை வழங்கினர்.
பேரிடர் மேலாண்மைத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு இந்தக் கருத்தரங்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. தற்போதுள்ள அணுகுமுறையில் செயற்கை நுண்ணறிவு ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், பேரிடர் மீட்பில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களுக்கும் அது ஊக்கத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், நிகழ்வின் போது செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த ஒரு அமர்வும் நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236376®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236421)
வருகையாளர் எண்ணிக்கை : 15