பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச மகளிர் தினமான நாளை புதுதில்லி கடமைப் பாதையில் பெண்கள் பங்கேற்கும் 'சக்தி நடைப்பயணம்' நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 9:41AM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நாளை (8 மார்ச் 2026), மகளிர் பங்கேற்கும் 'சக்தி நடைப் பயணம்' நடைபெறவுள்ளது. பெண்கள் இந்தியாவுக்கு தலைமை வகிக்கின்றனர் (#ஷீலீட்ஸ்பாரத் - #SheLeadsBharat) என்ற கருப்பொருளில் பெண்கள் தலைமையிலான நடைப்பயணத்தை பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

பெண்களின் சாதனைகள், தலைமைத்துவம், பாலின சமத்துவம், பாதுகாப்பு, கண்ணியம், அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான கூட்டு உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதற்காக 'சக்தி நடைப்பயணம்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைப்பயணம் காலை 7:30 மணி முதல் காலை 10:00 மணி வரை நடைபெறும். இது இந்தியா கேட் முதல் விஜய் சௌக் வரை கடதைப் பாதை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் நடைபெறும்.

இந்த நிகழ்வில், ஆயுதப்படைகள், காவல்துறை, ஊடகங்கள், சுகாதாரம், விளையாட்டு, அரசு நிறுவனங்கள், தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகள் உட்பட பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 3000 பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236239&reg=3&lang=1  

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236341) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam