உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்கள் மருந்தக தினத்தையொட்டி திட்டப் பயனாளிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 1:07PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, 2026 ஆம் ஆண்டு மக்கள் மருந்தக தினத்தன்று, பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, மோடி அரசின் இந்த முன்முயற்சி, ஒரு வரலாற்று நடவடிக்கையாக, நாட்டின் ஏழைகளுக்கு மருந்துகளின் நிதிச் சுமையிலிருந்து நிவாரணம் அளித்துள்ளதாகவும், பொதுவான மருந்துகள் குறித்த விழிப்புணர்வை பரப்பியதாகவும் கூறியுள்ளார். இன்று, நாடு முழுவதும் சுமார் 18,000 மக்கள் மருந்தகங்கள் ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மருந்துகளை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் திட்டம் நாட்டுமக்களுக்கு 40,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளதாக  திரு ஷா கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236280&reg=3&lang=1

***

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236329) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati