வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உயர் தரத்திலான இந்திய கல்வி முறையை சேவையாக ஏற்றுமதி செய்வதன் மூலம் வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2026 3:50PM by PIB Chennai
உயர்தரத்திலான இந்திய கல்வி முறையை உலகின் பிற பகுதிகளுக்கு சேவையாக ஏற்றுமதி செய்வதன் மூலம் வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான உயர் கல்வியின் உலகமயமாக்கல் நடவடிக்கைகளை மறுவடிவமைப்பு செய்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற துணைவேந்தர்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
இந்தியாவில் உயர் கல்விக்கான எதிர்காலம் குறித்த பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துகளை அறிய விரும்புவதாக அவர் தெரிவித்தார். உலக நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, மாணவர் இயக்கங்கள், ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் இரட்டை பட்டப்படிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கு இம்மாநாடு தளமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் உலகளவில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கான உத்திகள் குறித்தும் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சர்வதேச அளவில் விரிவடைந்து வரும் சந்தையில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்வது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது சேவைக்கான தேவைகள் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235925®=3&lang=1
***
TV/SV/RJ/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236026)
வருகையாளர் எண்ணிக்கை : 18